வருந்துகிறோம்

Er.R. Murali

M.E., (Ph.D)., DMCAD., DISE.,

 


நடந்தது என்ன?

     Hi Tech Project Industries என்ற பெயரில் நாங்கள் மூவரும் காரைக்காலை அடுத்த தரங்கம்பாடியில் ஒர்க் ஷாப் ஒன்றில் நடத்தி வருகிறோம். அதில் நாங்கள் ஏற்கனவே சந்தையில் கிடைக்கக்கூடிய பல கண்டுபிடிப்புகளை காப்பியடித்து அதில் சிறு சிறு மாறுதல்களை காட்டி எங்களுடைய புதிய கண்டுபிடிப்பு என்று பொய் சொல்லி ஏமாற்றி வந்தோம்.

     அதே போல் எங்களிடம் லேத், டிரில்லிங் மெசின், வேக்டிங் மெசின், போன்றவை உள்ளதால், எங்கள் வொர்க் ஷாப்பிற்கு சிலர் வந்து, நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்து தன்னுடைய உண்மையான திறமையாலும்  உழைபாலும் தங்களுடைய பொன்னான நேரத்தை சிலவு செய்து,  சொந்த பணத்தை சிலவு செய்து  பல கண்டு பிடிப்புகளை எங்கள் இடத்தில் வைத்து செய்துகொள்ள அனுமதி கேட்பார்கள். ஆனால் நாங்கள் அதை எங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்வோம். 

     அப்படி அவர்கள் எங்கள் இடத்தில் வைத்து செய்யும்போது   கண்டுபிடிப்பாளர்களுக்கு தெரியாமல் அவர்களிட;இருந்து அந்த செய் முறைகளை நாங்கள் மூவரும் கவனாமாக பார்த்துக்கொள்வோம்,  அவர்கள் வெளியாகும் வரை காத்திருந்து, அவர்கள் செய்து வைத்த பொருளை இரவு நேரங்களில், நாங்கள் எடுத்து முயற்சித்து பார்ப்போம், பின் அதை அதி இடத்தில் இருந்த படியீ வைத்து விடுவோம். சில நாட்களில் அவர்கள் தன்னுடைய வேலையை முடித்து விட்டு, எங்கள் வொர்க் ஷாப்பை பயன் படுத்தியதற்கு நாங்கள் கேட்ட பல ஆயிரங்களை கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.

     நான் சில மாதங்கள் காத்திருப்போம், பின் அப்படி காப்பியடிக்கப்பட்ட அவற்றை எங்களுடைய கண்டுபிடிப்பு போல் காட்டுவதற்காக, நான் ப்ராஜெக்ட் விற்பனை செய்வதற்காக வைத்துள்ளwww.hitechprojectindustries.com என்ற இணையதளத்தில் வெளியிடுவோம். அதைப்பார்த்த பல கல்லூரி மாணவர்கள் தனக்கும் இப்படி ஏதாவதொன்று செய்துதரும்படி கேட்டுக்கொள்வார்கள், பணம் எவ்வளவு கேட்டாலும் தருவார்கள்.. அதனால் மிகுந்த ஆர்வத்தில் நாங்களும், சரட்டு மேனிக்கு கண்டதையும் சேர்த்து ஒரு புதிய கண்டுபிடிப்பு போல் காட்டி ரூ. 10,000 முதல் 1,00,000 வரை பலரை ஏமாற்றி வாங்கிக்கொண்டு வந்தோம். அதை அந்த மாணவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்பு போலவும், அதற்கு எங்களுடைய Hi Tech Project Industries பெரிதும் உதவியாகவும், தாங்கள் படிக்கும் கல்லூரியில் கூறி மிகுந்த பாராட்டுதலையும், டி.வி. மீடியாவின் மூலம் விஞ்ஞானிஎன்ற பெயரையும் பெற்றுக்கொள்வார்கள். 

      இதில் எங்களுக்கு மிகுந்த பெயரும், புகழும் கிடைத்ததால், எங்களுடைய ஒர்க் ஷாப்பை விரிவுபடுத்த திட்டமிட்டு பலரிடம் நன்கொடை கேட்டோம். பலரும் நாங்கள் உண்மையான திறமைசாலிகள் தான் என்று நம்பி  வாரி வாரி வழங்கினார்கள். அதில் வந்த பல லட்சங்களில் சில லட்சங்களில் கட்டடங்கள் கட்டிவிட்டு மீதத்தை கணக்கில்லா இருப்பில் வைத்துள்ளோம்.அப்படி எங்களை நம்பி நன்கொடை கொடுத்தவரான  காரைக்காலை சேர்ந்த பிரான்சில் வசித்து வந்தவரும் , தொழில் அதிபரும், சர்வீஸ்-டு-பப்ளிக் பத்திரிகை எடிட்டரும், கடந்த வருடம் தண்ணீரில் வாகனம் இயக்கும் சாதனம் ஒன்றை தானே முழுமையாக கண்டுபிடித்தவருமான M.M.Y. ஹமீது மரைக்கார் அவர்களும் எங்களால் வழாக்கம் போல் மற்றவர்களை போல்  ஏமாற்றப்பட்டார்.

     அதன் விபரம் வருமாறு: 
     நாங்கள் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் (research institute) ஒன்றை தொடங்க திட்டமிட்டோம். அதற்கு அண்ணாமலை பல்கலைகழக ஒப்புதல் தேவைப்பட்டது. அந்த ஒப்புதலை தருவதற்கு எங்களுக்கு பல நிபந்தனை விதித்தார்கள். அதில் ஒன்று எங்கள் இடத்தில் கம்யூட்டர் லேப் ஒன்று இருக்க வேண்டும் என்பது, ஆனால் அப்போது எங்களிடம் பணம் இல்லை. அதனால் M.M.Y. ஹமீது மரைக்காரை அணுகினோம். அப்போது எங்களுடைய ஒர்க் ஷாப் நல்ல வசதியாக உள்ளதால் தான் பிரான்சில் இருக்கும் போதே முயற்சித்துக்கொண்டு இருக்கும் தன்னுடைய ஒரு கண்டுபிடிப்பான வாகனத்தை தண்ணீரில் இயக்கும் சாதனத்தை (HYDROGEN SPLITTING KIT) எங்கள் இடத்தில் வைத்து செய்துக்கொள்ள முன்வந்தார். அதற்கு அங்கள் இடத்தை பயன் படுத்துவற்கு கூலியாக  3 கம்யூட்டர்களையும், இரண்டு புது இன்வெர்டர் பேட்டரி களையும்  இலவசமாக தந்து, பல ஆயிரங்களை டொனேஷனாகவும் தந்தார்..  அதன்படி கடந்த 2012 அக்டோபர் முதல் 2013 ஜனவரி வரையில் அவருடைய கடின முயற்சியால் அந்த சாதனம் வெற்றியை கண்டது. 


      M.M.Y. ஹமீது மரைக்கார் வெளிப்படையான உள்ளம் கொண்டவராதலால் அவர் செய்யும் கண்டுபிடிப்பில் எங்களிடம் எதையும் மறைக்காமல், காட்டியே செய்துவந்தார். ஆனால் அவருடைய வெளிப்படையான என்னத்தை நாங்கள் மூவரும் தவறாக பயன்படுத்திக்கொண்டோம். அவர் செய்த ஒவ்வொன்றையும் நாங்கள் கணக்கு எடுத்து வைத்துக்கொண்டு,நாங்கள்  அதே சாதனத்தை அதே அளவில் நாங்கள் செய்ய முற்பட்டோம். எங்களுக்கும் போதுமான ஹைட்ரஜன் கிடைத்தது. பிறகு அதை நாங்கள் வழக்கம் போல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்து, அதை பணமாக்க ஆசைப்பட்டோம். எங்கள் ஆசை நிறைவேறியது. முதலில் பாண்டிச்சேரியில் விநாயகா  பொறியியல் கல்லூரி (Vinayaka Engineering College) மாணவர்கள் தங்களுடைய காலேஜ் ப்பிராஜட் முடிக்க இந்த ஹைட்ரஜன் கிட்டை, 2013 ஏப்ரலில் நல்ல விலை கொடுத்து எங்களிடமிருந்து வாங்கினார்கள். பிறகு 2014ல் சென்னை சத்யபாமா கல்லூரி மாணவர்கள் தங்களுடைய கல்லூரி ப்பிராஜட்டுக்காக எங்களிடமிருந்து தாங்கள் ஏற்கனவே திருடி விற்று காசாக்கிய அதே ஹைட்ரஜன் கிட்டை உலகம் அறியாமல் பல ஆயிரம் கொடுத்து வாங்கினார்கள். நாங்கள் அந்த ஹைட்ரஜன் கிட்டுக்காக எந்த செலவும் செய்யாமலும், எந்த முயற்சியும் எடுக்காமலும் ஒரே  பொருளின்  தொழில் நுட்பத்தை இரு முறை விற்றோம்.

     அவர் எங்கள் இடத்தில் வைத்துதான் தன்னுடைய கண்டுபிடிப்புகளை செய்தார் என்பதற்கு ஆதாரமாக, பல போட்டோக்களும், பல ப்ளெக்ஸ்  விளம்பரம் போர்டுகளும், பல மீடியாக்கள் எங்கள் இடத்தில் வைத்து எடுத்த வீடியோ கவரேஜ்களும் ஆதாரமாக உள்ளன. அதே சமயம் இப்படி நாங்கள் திருடிய கண்டுபிடிப்பை வெளியிட்டதை பலர் எங்களை கேவலமாக பேசிவிட்டதால், நாங்கள் அவமானம் தாங்க முடியாமல், எங்க இடத்தில் உள்ள அவர் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை அஜித்துகொண்டு வருகிறோம். 

பொதுவாக பத்திரிக்கையாளர்களும், T.V. காரர்களும் நாங்கள் இழுத்த போக்குக்கு வருவார்கள். அதன் படி தேவைப்படும் போதெல்லாம் நாங்கள் போன் மூலம் அழைப்போம். உடனே ஓடோடி வருவார்கள். நாங்கள் சொல்வதை அப்படியே பத்திரிக்கையிலும் எழுதுவார்கள். பத்திரிகைகளில் மாணவர்கள் பெயர்களும் புகைப்படங்களும், அவர்கள் கண்டுபிடிப்பு என்று எழுதியிருப்பதை கண்டு மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும், நண்பர்களும் பெருமிதம் கொள்வார்கள். பிறகு நாங்கள் கேட்கும் பணத்தை பேரம் பேசாமல் தந்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட செயல் முறை எங்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுத்ததால் நாங்கள் இப்படித்தான் கடந்த 5 வருடங்களாக பல ப்பிராஜட்டுகளை செய்து காசுபார்தோம். எங்களுடைய பல பத்திரிகை செய்திகளை கண்டு பலரும் எங்கள் ஒர்க் ஷாப்புக்கு வந்து எங்களை பாராட்டி எங்கள் கட்டட கட்டுமான பணிக்காக பல பல ஆயிரங்களை அள்ளி கொடுத்தார்கள்.

மேற்சொன்ன தவருகளை எண்ணி நாங்கள் முரளி, ஜெயராஜ், பாலா ஆகிய மூவரும் வருந்துகிறோம். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து எங்களுக்கு உதவிய அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம்.


 

எங்களுடைய போட்டோ  & வீடியோ மற்றும் பத்திரிகை ஆதாரங்களுடன் விரைவில்.... இவண்  IJCET 

காரைமுரசு டி.வி. யில் 2013 ஜனவரி மாதமே இந்த கண்டுபிடிப்பை முழுதுமாக முடித்துவிட்டர் திரு ஹமீது அவர்கள், ஆனால் நாங்கள் 2014 பிப்ரவரியில், சென்னை, சத்யபாமா கல்லூரி மானவர்கள் கண்டுபிடித்தது போலவும், அதற்கு நாங்கள் உதவியதாகவும் பெரும் பணத்தை வாங்கிக்கொண்டு செய்தியை வெளியிட்ட்டோம். அது மட்டுமில்லாமல், தமிழ் நாட்டில் புதிதாக வெளிவந்த 'தி இந்து' தமிழ் பத்திரிக்கையில் எங்கள் ஆட்களை கையில் வைத்துள்ளதால் இதற்கும் பணம் கொடுத்து இதை புதிய கண்டுபிடிப்பாக போட்டும் காட்டினோம்.

)


more info